திங்கள், 8 ஏப்ரல், 2013

ரோட்டேர்டம் (Rotterdam)





வானத்தை தொடும் அளவிற்கு உயிரமான மாளிகைகளைக்கொண்டது ரோட்டேர்டம் எனப்படும் நகரம். இது நெதர்லாந்து நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும். ஐரோப்பா கண்டத்திலேயே  மிகப்பெரிய துறைமுகம் இங்குதான் உள்ளது.

ஷாங்காய்க்கு அடுத்து இந்த துறைமுகம்தான் மிக பரபரப்பான ஒன்றாகும்.

கொஞ்சம் உன்னித்து பார்த்தல் ரோட்டேர்டம் நெதர்லாந்தின் மற்ற நகரங்களிலிருந்து சற்று மாறுபட்ட நிலையில் இருப்பதை நன்கு உணரலாம். நெதர்லாந்தின் உள்ள நகரங்கள் பலமைமாறாமல் தோற்றம் தரும். ஆனால் ரோட்டேர்டம் ஒரு புதிய நகரமாய் காணப்படுகின்றது, 

இரண்டாம் உலகபோரின்போது ரோட்டேர்டம் ஜெர்மனி யால் முற்றிலும் அழிக்கப்பட்டது . பிற்காலத்தில் ரோட்டேர்டம் ஒரு புதிய நகரமாக உருவானது.

சுற்றுலா பயணிகளை கவரும் பல இடங்கள் இங்கே உள்ளது. அதில் நான் கண்டுகளித்த சில இடங்களை இங்கே பார்க்கலாம்.

துலிப் பூந்தோட்டங்கள் 

ஏப்ரல் மாதம் ஆரம்பித்துவிட்டால் கண்ணைக்கவரும் துலிப் பூக்கள் இந்த நகரத்தை அலங்கரிக்கும். பல ஆராய்ச்சி செய்து இந்த பூக்களை விதவிதமான வண்ணங்களில் பூக்க வைக்கிறார்கள். துலிப் பூக்களுக்கு என்றே ஒரு தனி ஊர் நெதர்லாந்தில் உள்ளது அதன் பெயர் கெஉகென்ஹொப் (Keukenhof). 


























கன சதுர வீடுகள் (Cube House)


 
படத்தில் உள்ளதை பார்த்தால் இது ஏதோ அட்டை வீடு மாதிரி தெரியும், அனால் இது உண்மையிலே மக்கள் குடியிருக்கும் வீடுகள் தான். ரோட்டேர்டமில் ப்ளாக் என்ற இடத்தில் ஒரு நடைபாலத்தில் இந்த குடியிருப்பை கட்டி இருக்கிறார்கள். ஒரு சில வீடுகளை கண்காட்சியாக வைதிருக்கிறாக்கள், மற்ற வீட்டில் எல்லாம் மக்கள் வாழ்ந்து கொண்டு 

இருக்கிறார்கள்.
  வெளியில் இருந்து பார்பதற்கு  கவிழ்ந்தது போல் காட்சியளித்தாலும் வீட்டிற்குள் போனால் ஒரு சாதாரண வீடு மாதிரிதான் இருக்கிறது.































 பழைய கப்பல் துறைமுகம் 

ரோட்டேர்டமின் பழைய கப்பல்துறைமுகம் இப்போது கண்காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பல பெரிய உண்மையான கப்பல்களும் மக்களின் பார்வைக்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது 






 இரோமாஸ் 

இரோமாஸ் நெதர்லாந்தில் உயரமான சிகரம். இதனுடைய சிறப்பு அம்சம். இந்த  கோட்டையின் உச்சியில், தன்னைத்தானே சுற்றி மேலும் கீழும் இறங்கும் ஒரு அமைப்பு உள்ளது. ஒரே இடத்தில் உக்கார்ந்து கொண்டு இந்த ஊரை சுற்றலாம் :-)



இரோமாஸ் உட்ச்யிலுல்ல சுழலும் அறையில் இருந்து எடுத்த சில காட்சிகள். 










சனி, 6 ஏப்ரல், 2013

முதல் முயற்சி நேதேர்லண்டை பற்றி

நேதேர்லண்ட(Nederland ) மிக அழகான நாடு, இந்நாட்டை ஹாலந்து(Holland ) எனவும் இந்நாட்டு மக்களை தட்ச்(Dutch ) என்று பரவலாக அழைப்பார்கள்


அம்ச்டேர்டம் இதன் தலை நகரம் . அம்ச்டேர்டம் மிகவும் பிரபலமான ஒரு நகரமாக கருத படுகிறது. இங்கு வாழும் மக்கள் உலகில் மிகவும் மகிழ்ச்சியாக இருபதாக சமிபத்தில் ஒரு கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.



இங்கு வாழும் மக்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் மிகுந்த  மரியாதையை கொடுகிறார்கள்.

இந்நாட்டின் சில பகுதிகள் கடல் மட்டத்துக்கு கீழே உள்ளது. அதனால் நாடு முழுவதும் தண்ணீரை வாய்க்கால்கள் மூலம் திசை திருப்பி வடிவமைத்து உள்ளார்கள்.


உலகில் தண்ணீரை/வெள்ளத்தை கட்டுப்படுத்துவதில் இந்நாடு சிறந்து விளங்குகிறது. நாடு முழுவதும் சாலைகளுக்கு சமமாக வாய்க்கால்கள் உள்ளன .


முற்காலத்தில் தண்ணீரை கட்டுப்படுத்துவதற்கு காற்றாலைகள் பயன்படுத்தப்பட்டன. இதன் காரணமாக நாடு முழுவதும் வாய்க்கால்கள் ஓரம் காற்றாலைகலை காணமுடிகிறது.  மின்சாரம் கண்டுபிடிக்கும் வரை இக்காற்றாலைகள் சோள மாவு அரைத்து ரொட்டி செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டன .



தட்ச் மக்கள் தங்கள் நாட்டில் உள்ள பழைய காற்றாலைகள் இன்னும் பாதுகாப்பாக வைத்துள்ளனர். காற்றாலைகள் தட்ச் நாட்டின் முக்கிய சின்னமாக போற்றி பாதுகாக்கப்படுகிறது.